வெள்ளவத்தையில் இடிந்த கட்டிடத்திற்குள் சிக்குண்டுள்ள இளைஞரை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வெள்ளவத்தையில் இடிந்த கட்டிடத்திற்குள் சிக்குண்டுள்ள இளைஞரை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வெள்ளவத்தையில் இடிந்த கட்டிடத்திற்குள் சிக்குண்டுள்ள இளைஞரை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 3:32 pm

ஹட்டன் – பத்தனை, க்ரெக்லி தோட்டத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வௌ்ளவத்தையில் நேற்று முன்தினம் (18) இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளில் க்ரெக்லி தோட்டத்தைச் சேர்ந்த இளைஞரொருவரும் ஈடுபட்டிருந்தார்.

எனினும், இதுவரை குறித்த இளைஞர் மீட்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

க்ரெக்லி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான ராமர் நிரோஷன் எனும் இளைஞரே இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் இதுவரை இளைஞர் மீட்கப்படாமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் என தோட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள இளைஞருக்காக க்ரெக்லி தோட்டத்திலுள்ள காளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்