மட்டக்களப்பில் வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்

மட்டக்களப்பில் வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 8:47 pm

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் இன்று பிற்பகல் வணக்கஸ்தலம் ஒன்றின் மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நான்கு பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்