பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். வடமராட்சிக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். வடமராட்சிக்கு விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 8:30 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிக்கு இன்று முற்பகல் விஜயம் செய்திருந்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் பிரதமரோடு சென்றிருந்தனர்.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் வடமராட்சி பருத்தித்துறை – துறைமுக பகுதிக்கும் அதனையடுத்து, வடமராட்சி – குடத்தனை பகுதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.

அதன் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் மணற்காடு கடற்கரைப் பகுதியை ஹெலிகொப்டரில் இருந்து பார்வையிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்