பதவி விலகி சரித்திரம் படைக்கும் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ

பதவி விலகி சரித்திரம் படைக்கும் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ

பதவி விலகி சரித்திரம் படைக்கும் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 4:14 pm

ஜப்பான் நாட்டின் 125 ஆவது மன்னரான, 83 வயதான அகிஹிட்டோ பதவி விலகுகிறார்.

இது தொடர்பான சட்டமூலத்திற்கு ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த வருடம் தொலைக்காட்சி உரையொன்றின் மூலம் வயோதிபம், உடல்நலக்குறைவு காரணமாக தான் பதவி விலக விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் தனது பொறுப்புக்களை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என்றும் அகிஹிட்டோ குறிப்பிட்டிருந்தார்.

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை.

அங்கு கடைசியாக 1817 ஆம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர் தான் பதவி விலகியுள்ளார். அதன் பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

அந்த வகையில், தற்போதைய ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி புதிய சரித்திரம் படைக்கவுள்ளார்.

மன்னர் பதவி விலகுகிற நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 19 ஆக உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்