சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது; போதைப்பொருள் வில்லைகளுடன் இருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது; போதைப்பொருள் வில்லைகளுடன் இருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது; போதைப்பொருள் வில்லைகளுடன் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 3:50 pm

சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு – தளுபத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ciggarattes
இதேவேளை, பொரளை சஹஸ்புர பகுதியில் போதைப்பொருளடங்கிய 35 வில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான இளைஞர் ஒருவரே போதைப்பொருளடங்கிய வில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மருதானையில் போதைப்பொருளடங்கிய 5 வில்லைகளுடன் 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்