கிறிஸ்டல்மேட் எனப்படும் புதிய ரக போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது

கிறிஸ்டல்மேட் எனப்படும் புதிய ரக போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது

கிறிஸ்டல்மேட் எனப்படும் புதிய ரக போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 3:16 pm

கிறிஸ்டல்மேட் எனப்படும் புதிய ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் வத்தளை – எலகந்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள், ஐஸ் என்ற பெயரில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 200 கிராம் போதைப்பொருள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆடைகளைக் கொண்டு வரும் போர்வையில், உடலில் மறைத்து மிக சூட்சுமமாக போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் இன்று வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக கலால் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்