வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன பதவிப்பிரமாணம்

வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2017 | 5:24 pm

வட மத்திய மாகாண அமைச்சர் பதவியை எஸ்.எம்.ரஞ்சித் இராஜினாமா செய்ததை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சுசில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, இன்று அவர் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

வட மத்திய மாகாண சுகாதார அமைச்சர் கே.எச்.நந்தசேன பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.எம்.ரஞ்சித் கடந்த 10 ஆம் திகதி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

மாகாண ஆளுநரை நேற்று (15) சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்கள், தமது கையொப்பமடங்கிய சத்தியக்கடதாசியொன்றைக் கையளிக்க முயன்றனர்.

மாகாண சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு எஸ்.எம்.ரஞ்சித்திற்கு இருப்பதால், அவரை முதலமைச்சராக நியமிக்குமாறு கோரப்பட்டிருந்த அந்த சத்தியக்கடதாசியை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த சத்தியக்கடதாசியில் கையொப்பமிட்டிருந்த 17 உறுப்பினர்களில் ஒருவரான சுசில் குணரத்ன இன்று காலை போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சராக ஆளுநர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்