முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: வடக்கு, கிழக்கில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: வடக்கு, கிழக்கில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2017 | 7:30 pm

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் ஈகைச்சுடரேற்றி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வொன்று சம்பூர் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தலில் வட மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டிருந்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வொன்று திருகோணமலை – வெலிக்கடை சிறைக்கைதிகள் நினைவரங்கிற்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலை அருகில் இன்று நடைபெற்றது.

2006 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களை நினைவுகூரும் வகையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இதன்போது செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்