மீண்டு பிரபுதேவாவுடன் இணையவுள்ள நயன்தாரா?

மீண்டு பிரபுதேவாவுடன் இணையவுள்ள நயன்தாரா?

மீண்டு பிரபுதேவாவுடன் இணையவுள்ள நயன்தாரா?

எழுத்தாளர் Staff Writer

16 May, 2017 | 12:13 pm

‘பீட்சா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.

அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தில் தனுஷை இயக்க முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தனுஷிற்கு பதிலாக அப்படத்தில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் `தேவி’ படத்தின் மூலம் மீண்டு தலைக்காட்டினார்.

இந்நிலையில், ‘யங் மங் சங்’, ‘கொலையுதிர்காலம்’ படத்தின் இந்தி பதிப்பு உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஷால் – கார்த்தி இணைந்து நடிக்க உள்ள `கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தையும் இயக்குகிறார்.

இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகி இருந்த நிலையில், கன்னடர்கள் எதிர்ப்பால் இப்படத்தில் இருந்து தான் விலகுவதாக சம்யுக்தா அறிவித்திருந்தார்.

இதையடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது, ஆனால், படக்குழு சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்