புத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை

புத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை

புத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

16 May, 2017 | 1:13 pm

யாழ்ப்பாணம், புத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த சந்தேகநபர்களை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்துவதற்கு கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்