பப்புவா நியூ கினியாவில்  17 கைதிகள் சுட்டுக்கொலை

பப்புவா நியூ கினியாவில் 17 கைதிகள் சுட்டுக்கொலை

பப்புவா நியூ கினியாவில் 17 கைதிகள் சுட்டுக்கொலை

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2017 | 4:02 pm

பப்புவா நியூ கினியாவில் சிறையை உடைத்து தப்பிக்க முயன்ற கைதிகள் 17 பேரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

லே நகரிலுள்ள புய்மோ சிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட கடுங்குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அந்த கைதிகள் கடந்த 12 ஆம் திகதி கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, சிறைச்சாலை சுவரை இடித்துத் தள்ளிவிட்டுத் தப்பியோட முயற்சித்த கைதிகள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், 17 கைதிகள் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் பிடிபட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தப்பியோடிய சிறைக்கைதிகள் 57 பேர் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர்.

அவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே சிறையில் கைதிகள் தப்பிக்க முயன்றபோது, 12 பேர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்