எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இலங்கைக்கு மீண்டும் GSP+ வரிச்சலுகை

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இலங்கைக்கு மீண்டும் GSP+ வரிச்சலுகை

எழுத்தாளர் Staff Writer

16 May, 2017 | 11:36 am

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை மீண்டும் கிடைக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரநிதிநிதிகள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இலங்கையின் நேரடி வர்த்தக ஏற்றுமதிகளுக்காக 66 வீத வரிச்சலுகை வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தைத்த ஆடைகள் மற்றும் மீன் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளுக்கு இந்த வரிச்சலுகை பாரிய நன்மைகளை பெற்றுத்தரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச நியமங்களை நிறைவேற்றும் விடயத்தில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பின்பற்றும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே GSP+ வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விவகாரங்களுக்கான ஆணையாளர் செசிலியா மேம்ஸடோர்ம் கூறியுள்ளார்.

சர்வதேச நியமங்களை தொடர்ந்தும் பேணுகின்ற பட்சத்தில், GSP+ சலுகை மூலம் இலங்கை சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், உயர் நடுத்தர வருமான மட்டத்திலும் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு இந்த சலுகையை அனுபவிக்க முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய ஊடக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்