இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 3310

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 3310

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 3310

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2017 | 4:49 pm

மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 போன் விற்பனை இந்தியாவில் மே 18 ஆம் திகதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 போனின் விலை இந்திய ரூபா 3,310 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நோக்கியா 3310 போனை ஒரு முறை முழுமையாக மின்னூட்டம் (சார்ஜ்) செய்தால் 22 மணி நேரம் வரை அது நீடிக்கும் என நோக்கிய நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இதனால் இந்த போனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிதாக மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310- இல் உள்ள புதிய அம்சங்களாவன…

* நோக்கியா 3310 பழைய வடிவத்தைக் காட்டிலும் பெரிய திரையைக் கொண்டுள்ளது. இதன் அளவு 2.4 அங்குலம் ஆகும்.

* புதிதாக வெளிவரவுள்ள நோக்கியா 3310 சாம்பல், இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் வெளிவரவுள்ளது.

* பழைய நோக்கியா 3310 போனில் மிகவும் கவரப்பட்ட கைபேசிப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டு நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றுள்ளது.

கைபேசி உலகில் நோக்கியா முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது.

இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், பின்னர் அதன் கைபேசி வர்த்தகத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்