ஆச்சிபுரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை

ஆச்சிபுரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை

ஆச்சிபுரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2017 | 7:10 pm

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், நட்ட ஈடு செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஆச்சிபுரம் பகுதியில் 11 வயதான சிறுமியை, மஸ்கெலியாவைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்