வல்வெட்டித்துறை, மிருசுவிலில் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

வல்வெட்டித்துறை, மிருசுவிலில் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 7:49 pm

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் நடைபெற்ற நினைவேந்தலில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

இதேவேளை, இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் மற்றுமொரு நிகழ்வு யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மிருசுவில் சூசையப்பர் தேவாலயம் முன்றலில் நடைபெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்