பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா சென்றடைந்தார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா சென்றடைந்தார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா சென்றடைந்தார்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 10:00 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் பீஜிங் நகரிலுள்ள கெப்பிட்டல் விமான நிலையத்தினை சென்றடைந்தனர்.

பீஜிங் நகரின் அரசியல் ஆலோசக சம்மேளனத்தின் நிலையியல் சபையின் உப தலைவர் லீ ஜோங்யூ, இலங்கைக்கான சீன தூதுவர் ஜீ ஷியாங் லியாங், சீனாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் கருணசேன கொடித்துவக்கு ஆகியோர் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினரை வரவேற்றனர்.

இலங்கை தூதுக்குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் வலய பணிப்பாளர் சாவித்ரி பானபொக்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டுப்பாதை தொடர்பிலான மாநாடு சீன ஜனாதிபதி ஜீ ஜிங் பிங் தலைமையில் நாளை (14) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் 30 நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டின் பின்னர் சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஏனைய நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்