நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி இலங்கை விஜயம்

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி இலங்கை விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 8:06 pm

ஐக்கிய நாடுகள் வெசாக் விழாவில் கலந்துகொள்வதற்காக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை அமைச்சர்களான தலதா அத்துக்கோரல, விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் வரவேற்றனர்.

நேற்றைய தினம் ஆரம்பமாகிய பௌத்த மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் நடைபெற்றதுடன், நிறைவு நாள் நிகழ்வுகள் நாளைய தினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பித்யா தேவி பந்தாரி, நேபாளத்தின் முதலாவது பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்