தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திர விற்பனையால் 3 பில்லியன் ரூபா இழப்பு: நீதிமன்றில் மனு தாக்கல்

தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திர விற்பனையால் 3 பில்லியன் ரூபா இழப்பு: நீதிமன்றில் மனு தாக்கல்

தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திர விற்பனையால் 3 பில்லியன் ரூபா இழப்பு: நீதிமன்றில் மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 10:21 pm

பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டதால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவை இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மேலதிக சாட்சியங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன.

மனுதாரரான சட்டத்தரணி நாகஹனந்த கொடிதுவக்கு இந்த சாட்சியங்களை முன்வைத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் ஒன்றையும் நாகஹனந்த கொடிதுவக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த பட்டியலுக்கு அமைய, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை மூன்றாம் தரப்பிற்கு விற்பனை செய்துள்ளனர்.

சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாகத் தெரிவிக்கும் ஆளும் கட்சிகள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலில் அடங்கியுள்ளன.

தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் 23 தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்