ட்விட்டர் கணக்கில் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை: பாடகி சுசித்ரா முறைப்பாடு

ட்விட்டர் கணக்கில் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை: பாடகி சுசித்ரா முறைப்பாடு

ட்விட்டர் கணக்கில் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை: பாடகி சுசித்ரா முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 5:27 pm

கடந்த சில மாதங்களின் முன்னர் பாடகி சுசித்ராவின் பெயரிலான ட்விட்டர் கணக்கிலிருந்து தனுஷ் மற்றும் சில பிரபலங்கள் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஊடுருவப்பட்டதாக தகவல் வெளியானது.

பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர்.

பிறகு, அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று, தனது ட்விட்டர் கணக்கில் புகைப்படங்கள் வெளியானதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தனது கணக்கை ஊடுருவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியும் மனு அளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்