குடியிருப்பு பகுதியில் மயானங்கள் வேண்டாம்: யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

குடியிருப்பு பகுதியில் மயானங்கள் வேண்டாம்: யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 8:11 pm

குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் மயானங்களை அமைக்கக்கூடாதென வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் காணப்படுவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்