சிரச வெசாக் வலயம்: புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபட பெருந்திரளான பக்தர்கள் வருகை

சிரச வெசாக் வலயம்: புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபட பெருந்திரளான பக்தர்கள் வருகை

எழுத்தாளர் Bella Dalima

11 May, 2017 | 7:38 pm

புத்த பெருமானின் பிறப்பு, பரிநிர்மாணம், இறப்பு ஆகிய மூன்று பரிணாமங்களையும் ஒரே தினத்தில் நினைவுகூரும் சிரச – ஜோன் கீல்ஸ் சர்வதேச வெசாக் வலயத்திற்கு இரண்டாம் நாளான இன்றும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக பெருந்திரளான பக்தர்கள், கொழும்பு – 2, எம்.டி.வி. – எம்.பி.சி தலைமைக் காரியாலய வளாகத்தில் இன்று காலை முதல் காத்திருந்து, வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசேட பூஜைகளைத் தொடர்ந்து புனித சின்னங்களை வழிபடுவதற்கான சந்தர்ப்பம் பக்தர்களுக்குக் கிட்டியது.

திஸ்ஸமகாராம சந்தகிரி தூபியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்த பகவானின் புனித சின்னங்கள் சிரச – ஜோன் கீல்ஸ் சர்வதேச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

புத்த பகவானின் பிரதம சீடர்களான சரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.

நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித சின்னங்களும், 18 தேரர்களின் புனித சின்னங்களும், மிஹிந்தலையில் இருந்து கொண்டுவரப்பட்ட மஹிது தேரரின் புனித சின்னங்களும் வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரச – ஜோன் கீல்ஸ் சர்வதேச வெசாக் வலயம் நாளை இரவுடன் நிறைவு பெறவுள்ளது.

 

 

18342081_1520715317988721_6957016804715583309_n

18425043_1520637771329809_6362129222037925669_n

18341683_1520683291325257_1813983360202164864_n18447676_1520683881325198_3617646770702119547_n

18423757_1520715464655373_6955673878990129628_n

18403334_1520714711322115_250824868319232003_n

18342148_1520637747996478_4200867807803307950_n

17990907_1520637657996487_3176208063358173033_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்