மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது

மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது

மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2017 | 6:18 pm

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது என இந்திய மத்திய அரசின் இணைச்செயலாளர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐ.நா. வின் சர்வதேச வெசாக் தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காகவே நரேந்திர மோடி இலங்கை செல்வதாக இந்திய பெருங்கடல் பிராந்திய இணைச் செயலாளர் சஞ்சய் பாண்டா கூறியுள்ளார்.

அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை எனவும் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக சன் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளின் சார்பில் கூட்டு நடவடிக்கைகள் குழு அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய மத்திய அரசின் இணைச்செயலாளர் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், இலங்கைக்கு அவர் விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்