புத்த பிரானின் கோட்பாடாக இருந்த சமத்துவத்தையே இன்றைய உலகமும் வேண்டி நிற்கிறது – ஜனாதிபதி

புத்த பிரானின் கோட்பாடாக இருந்த சமத்துவத்தையே இன்றைய உலகமும் வேண்டி நிற்கிறது – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

10 May, 2017 | 8:24 am

புனித வெசாக் பௌர்ணமி தினம் இன்றாகும்

உலகளாவிய ரீதியில் பௌத்தர்கள் பல்வேறு புண்ணிய காரியங்களில் இன்று ஈடுபடுவர்.

‘சமூக நீதி மற்றும் பேண்தகு உலக சமாதானத்துக்கான பௌத்த தர்மத்தின் போதனைகள்’ என்பதே, சர்வதேச வெசாக் விழாவின் தொனிப்பொருளாகும்.

புத்த பிரானின் காலத்தில் அடிப்படைக் கோட்பாடாகவிருந்த சமத்துவத்தையே இன்றைய உலகமும் உருக்கமாக வேண்டி நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ள வெசாக் வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 14 ஆவது சர்வதேச வெசாக் விழாவின் முதன்மைப் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டமைக்கு அண்மைக் காலத்தில் நாம் பெற்றுக் கொண்ட வெற்றிகளும் களம் அமைத்துக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

முப்பெரும் மங்கல நிகழ்வுகளில் ஒன்றாகிய புத்தபெருமானின் முக்திப்பேற்றுடன் ஆரம்பமாகும் எமது தேசத்தின் வரலாறானது, இம்முறை சர்வதேச வெசாக் விழா இலங்கையில் நடத்தப்படுவதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கின்றது எனவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்புதவற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தபெருமானின் போதனைகளூடாக முழு உலகிற்கும் நிரந்தர சமாதானம் மற்றும் சமூக நீதி என்பவற்றினை பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு கிட்ட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெசக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வெசாக் என்பது அமைதியினதும், ஒளியினதும் திருநாளாகும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

வெசாக் திருநாளை முன்னிட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது.

வெசாக்கின் ஆன்மீக கதிர்கள் பௌத்தர்களிடையேயும், அனைத்து மக்களிடையேயும் ஒற்றுயை வழங்குவதாகவும் பேரவையின் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்