தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில்  மூன் ஜே-இன் வெற்றி; வட கொரியாவுடன் நட்பு மலருமா?

தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் மூன் ஜே-இன் வெற்றி; வட கொரியாவுடன் நட்பு மலருமா?

தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் மூன் ஜே-இன் வெற்றி; வட கொரியாவுடன் நட்பு மலருமா?

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2017 | 4:12 pm

தென் கொரியாவில் நேற்று (09) நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன் ஜே-இன் (64) வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் 13 பேர் போட்டியிட்டனர். தென் கொரிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மூன் ஜே-இன், 41.08 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வட கொரியாவுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்ற கொள்கையை உடையவர் மூன் ஜே இன். அவரது மகத்தான வெற்றி அந்த இரு நாடுகளிடையேயான உறவுகளில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

தென் கொரிய அதிபராகப் பதவி வகித்த பார்க் கியூன் ஹை ஊழல் வழக்கில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பதவி நீக்கத்தைத் தொடர்ந்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அங்கு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் மனித உரிமைகள் சட்டத்தரணியான  மூன் ஜே-இன் தெரிவாகியுள்ளார்.

இவர் வட கொரிய அகதிப் பெற்றோருக்குப் பிறந்தவர் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்