சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2017 | 8:56 am

வரைறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

வெசாக் வலயம் நாளையும் நாளை மறுதினமும் மக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு 02 பிரேபுருக் பிளேஸில் அமைந்து கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தில் வெசாக் வலயத்தை திறந்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெசாக் வலயத்தில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ள புத்த பகவானின் புனித சின்னங்கள் உள்ளிட்ட ஏனைய சின்னங்கள் நேற்று (09) பிற்பகல் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டன.

புத்த பகவானின் பிரதம சீடர்களான சரியுத், முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்கள் கங்காராம விஹாரைக்கு எடுத்து வரப்பட்டன.

நெல்லிகல ரஜ மஹா விஹாரையிலிருந்து எடுத்துவரப்பட்ட புத்த பகவானின் புனித சின்னங்கள் களனி ரஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று (10) பிற்பகல் புனித சின்னங்கள் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் மக்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அன்னதானசாலைகள் , பக்தி பாடல்கள், பொம்மலாட்டம், கடற்படையினரின் விசேட பெரஹெரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெசாக் வலயத்தை அலங்கரிக்கவுள்ளன.

குண்டலகேசி புராணக் கதையை பிரதிபலிக்கும் அலங்கார பந்தலுக்காக இம்முறை சுமார் இரண்டு இலட்சம் மின்குமிழ்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்