குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – பொலிஸ் மா அதிபர்

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – பொலிஸ் மா அதிபர்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2017 | 12:46 pm

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது சுற்றுச்சூழலில் நிகழும் குற்றங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பு அதிகாரியின் 071 8592020 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பொதுமக்கள் தமது முறைபாட்டினை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிலியந்தல பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.

இவர்களில் மூவர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சிறுவன் ஒருவரையும் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்