நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதத்தால் குறைவடைந்துள்ளது – நீர்ப்பாசனத் திணைக்களம்

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதத்தால் குறைவடைந்துள்ளது – நீர்ப்பாசனத் திணைக்களம்

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதத்தால் குறைவடைந்துள்ளது – நீர்ப்பாசனத் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

07 May, 2017 | 4:30 pm

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மழை பெய்கின்ற போதிலும், நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் குறைந்தளவான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இம்முறை சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படும் காணிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீரை விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்