ஊவா மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு தம்மை உள்வாங்குமாறு அம்பாறை பட்டதாரிகள் கோரிக்கை

ஊவா மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு தம்மை உள்வாங்குமாறு அம்பாறை பட்டதாரிகள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2017 | 7:14 pm

ஊவா மாகாணத்தில் நிலவும் க.பொ.த உயர்தர விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தம்மை உள்வாங்குமாறு அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளில் 10 விஞ்ஞான பட்டதாரிகளும் 22 விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு கற்பிக்கும் தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனமின்றி சேவையாற்றுவதாக கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கம் குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்