முல்லைத்தீவிலிருந்து கொழும்பிற்குப் பயணித்த கெப் லொறியுடன் மோதியது: ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவிலிருந்து கொழும்பிற்குப் பயணித்த கெப் லொறியுடன் மோதியது: ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 4:10 pm

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் வண்டி, புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் – சிரம்பியடி பகுதியில் இன்று அதிகாலை 2.25 க்கு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூவர் புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தொகை மதீப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் ஊழியர்கள் பயணித்த கெப் வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 40 வயதான கெப் வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியின் சாரதி தூக்கக்கலக்கத்தில் தவறான திசையில் வாகனத்தை செலுத்தியமையாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்