பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் சேவைகள் பாதிப்பு: பயணிகள் அசெளகரியம்

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் சேவைகள் பாதிப்பு: பயணிகள் அசெளகரியம்

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 8:53 pm

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தமை காரணமாக பயணிகள் இன்று பிற்பகல் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.

தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பிற்கு, ரயில் சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர்களை பிரதிநிதித்துப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், அவற்றின் ஒரு பிரிவினர் தொழிற்சங்க செயற்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டிலிருந்து விலகி இன்று சேவைக்கு சமூகமளித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இன்று காலை முதல் பிற்பகல் வரை ரயில் சேவையை உரிய நேரத்திற்கு முன்னெடுக்க முடியாத நிலையேற்பட்டது.

இதன் பின்னணியில் இரவு தபால் ரயில் சேவையை இரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்