தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்து

தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்து

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 8:19 pm

வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, SAITM நிறுவனத்தில் பல மாற்றங்களைச் செய்து, அதன் வைத்தியசாலையை அரசுடைமையாக்க தாம் தீர்மானித்ததாகவும் தனி நபரிடம் இருந்த அந்நிறுவனத்தினை கூட்டு வணிக நிறுவனமாக, பங்கு சந்தையில்
சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவினைப் பிறப்பித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வைத்திய பீடங்களின் அரசியல் தூண்டுதல் காரணமாக பிள்ளைகள் இன்று வகுப்புக்களுக்கு செல்லவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் காரணமாக அவர்களது தனிப்பட்ட வாழ்வில் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

SAITM நிறுவனத்துடன் எவ்வித தொடர்புமற்ற சில பிரச்சினைகளை இன்றைய பணிப்பகிஸ்கரிப்பின் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளார்கள் எனக் கூறிய ஜனாதிபதி, இது தொடர்பில் எந்த நாட்டுடனும் இதுவரை எவ்வித ஒப்பந்தங்களிலும் தாம் கைச்சாத்திடவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், எந்தவித இலாபமுமற்ற ஒப்பந்தங்களில் கைச்சாத்திட தாம் இடம்கொடுக்கப் போவதில்லை எனவும் வலியுறுத்திக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்