டெல்லி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: சந்தேகநபர்களின் தூக்குத்தண்டனை உறுதியானது

டெல்லி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: சந்தேகநபர்களின் தூக்குத்தண்டனை உறுதியானது

டெல்லி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: சந்தேகநபர்களின் தூக்குத்தண்டனை உறுதியானது

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 4:36 pm

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களின் தூக்குத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

டெல்லியில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டார்.

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆறு பேர் அடங்கிய குழுவொன்றினால் அம்மாணவி ஒடும் பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார்.

இந்த சம்பவம் இந்தியாவை மாத்திரமன்றி பிற நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்