இலங்கை விஜயத்தின் போது மீனவர்களை விடுவிக்க மோடி வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

இலங்கை விஜயத்தின் போது மீனவர்களை விடுவிக்க மோடி வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

இலங்கை விஜயத்தின் போது மீனவர்களை விடுவிக்க மோடி வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 7:38 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் மாநில அரசு மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவதை மாத்திரம் செய்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு அரசுகள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்திய மீனவர்களின் கைதுகளும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என இலங்கை அரசின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னர், திடீரென வட மாகாண மீனவர்கள் அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கூறுவது வியப்பாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தமிழக மீனவர்களின் படகுகள் பிரச்சினைக்கு நல்லெண்ண அடிப்படையில் தீர்வு காண இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்