இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் இயற்கை எய்தினார்

இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் இயற்கை எய்தினார்

இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2017 | 8:18 pm

இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் தனது 80 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

சுகவீனமுற்ற நிலையில் நீர்கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று பகல் காலமானதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி சற்சொரூபவதி நாதன் யாழ். இந்துக் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தார்.

காலஞ்சென்ற செல்வி சற்சொரூபவதி நாதன், செய்தி ஆசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றியுள்ளார்.

இவர் இந்து கலாசார அமைச்சின் தொடர்பியல் வித்தகர் பட்டம், ஜவஹர்லால் நேரு விருது போன்றவற்றை சுவீகரித்தவராவார்.

1995 ஆம் ஆண்டில் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான ஜனாதிபதி விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

இவ்வருடம் இடம்பெற்ற வானொலி அரச விருது வழங்கும் விழாவில் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி சற்சொரூபவதி நாதன் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வானொலி செய்தி வாசிப்பில் பல தசாப்த காலம் தனக்கென தனியிடத்தை வகித்து, நேயர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த ஒருவரே செல்வி சற்சொரூபவதி நாதன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்