மீதொட்டமுல்ல அனர்த்தம்: பாதிக்கப்பட்ட வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இந்த வாரம் நிறைவு

மீதொட்டமுல்ல அனர்த்தம்: பாதிக்கப்பட்ட வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இந்த வாரம் நிறைவு

மீதொட்டமுல்ல அனர்த்தம்: பாதிக்கப்பட்ட வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இந்த வாரம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

03 May, 2017 | 7:08 am

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையை இந்த வார இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு அறிக்கை கிடைத்தவுடன் நட்டஈடு வழங்கப்படும் என கொலன்னாவ பிரதேச செயலாளர் சுகத் சிசர குமார தெரிவித்துள்ளார்.

தற்போது வீடுள் பெற்றுக் கொண்டவர்களின் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 40 இலட்சத்திற்கும் அதிக சேதம் ஏற்பட்டிருப்பின் மேலதிக பணம் வழங்கப்படும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 40 இலட்சத்திற்கும் குறைவான தேசங்கள் பதிவாகியிருப்பின், அதற்கான மதிப்பீட்டு பணத்தை பாதிக்கப்பட்டவர்கள் அரசிற்கு திருப்பி செலுத்த வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ஒருதொகுதி மக்களுக்கான வீடுகள் வழங்கப்படும் வரை கொலன்னாவ நெற்களஞ்சியசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த அனர்த்தத்தில் சிக்கி 08 சிறார்கள் உள்ளடங்களாக 32 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்