நாட்டின் நாளாந்த மின்சார தேவை 10 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டின் நாளாந்த மின்சார தேவை 10 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 7:24 am

வறட்சியான காலநிலையால் மின் விநியோகத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்கத சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலைமைக்கேற்ப அதியுயர் அழுத்தமுடைய மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்காக பதிவு செய்துள்ள தொழிற்சாலைகளுக்கு இன்றுமுதல் அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டார்.

நாட்டின் நாளாந்த மின்சார தேவை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சின் உடகப் பேச்சாளர் கூறினார்.

இதுவரை 250 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் தன்னியக்க மின் பிறப்பாக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக தங்களை பதிவுசெய்துள்ளனர்.

அதனடிப்படையில் 500 இற்கு மெகாவோட்டுக்கும் அதிகமான மின்சார அலகுகளை பிறப்பாக்கம் செய்வதற்கு இயலுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்