யானை சின்னத்தை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

யானை சின்னத்தை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 7:52 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சியின் சின்னமான யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 40 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கியுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அவர் நேற்று (01) மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.

வேண்டுமென்றே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா அல்லது தவறுதலாக துப்பாக்கியைப் பயன்படுத்தியதால் இந்த சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

குறித்த கான்ஸ்டபிளை உளநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்