மே தினப் பேரணிகளில் கலந்துகொண்ட மூவர் உயிரிழப்பு; ஒருவர் காயம்

மே தினப் பேரணிகளில் கலந்துகொண்ட மூவர் உயிரிழப்பு; ஒருவர் காயம்

மே தினப் பேரணிகளில் கலந்துகொண்ட மூவர் உயிரிழப்பு; ஒருவர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 6:32 pm

கொழும்பில் நடைபெற்ற மே தினப் பேரணிகளில் கலந்துகொண்ட மூவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இவர்களின் இருவர் காலி முகத்திடலில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினப் பேரணியில் கலந்துகொண்டிருந்த போது உயிரிழந்துள்ளனர்.

80 வயதான விக்டர் சில்வா நேற்று (01) அதிகாலை வத்தேகம பகுதியில் இருந்து காலி முகத்திடலுக்கு வருகை தந்துள்ளார்.

வத்தேகம – அமுணுகம பகுதியைச் சேர்ந்த இவர், ஏற்கனவே பல தடவைகள் மே தினக் கூட்டங்களில் கலந்துகொண்டவராவார்.

இவர் சுகயீனமுற்று வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதேவேளை, காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்துகொண்டிருந்த 62 வயதான டபிள்யூ. சந்திரபாலவும் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவர் நிவித்திகல பகுதியைச் சேர்ந்தவராவார்.

இதேவேளை, காலி முகத்திடலில் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, வாரியப்பொலவைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு ஓல்கட் மாவத்தையில் பஸ் ஒன்றில் இருந்து வீழ்ந்து இவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு, சிகிரிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஒருவர் பஸ்ஸிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மிதி பலகையில் பயணித்த 44 வயதான இவர், பிதுரங்கல பகுதியில் பஸ் திருப்பப்பட்ட போது, கீழே வீழ்ந்து டயரில் அகப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்