மாரடைப்பு அபாயம் அதிகமுள்ள இரத்தப் பிரிவினர் யாரெனக் கண்டறியப்பட்டது

மாரடைப்பு அபாயம் அதிகமுள்ள இரத்தப் பிரிவினர் யாரெனக் கண்டறியப்பட்டது

மாரடைப்பு அபாயம் அதிகமுள்ள இரத்தப் பிரிவினர் யாரெனக் கண்டறியப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 3:47 pm

நெதர்லாந்தின் தேசா கோலே பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் ‘o’ இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, A, B மற்றும் AB இரத்தப் பிரிவினருக்கு 9 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாரடைப்பு நோயினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால், அதனைத் தடுக்க பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அதுபற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், எந்த இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் என தேசா கோலே பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்