பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 4:54 pm

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்பதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாகுபலிக்காக பிரபாஸைப் போன்றே உடம்பை ஏற்றி முரட்டுத்தனமாகக் காட்சியளித்தார் ராணா.

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணா, தனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்ற விடயத்தை வெளிப்படுத்தினார்.

தனக்கு பிறவியிலேயே கருவிழியில் குறைபாடு இருந்ததாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் பெற்று அறுவை சிகிச்சை நடந்த போதும் தனக்கு பார்வை கிடைக்கவில்லை என்றும் ராணா கூறியுள்ளார்.

வலது கண் மூலம் நிறங்களை மட்டுமே பார்க்க முடியும், மற்றபடி எதுவும் தெரியாது எனவும் ராணா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ”எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, நான் நலமாகவே உள்ளேன் என்பதையும் தயவு செய்து எழுதுங்கள்” என கூறியுள்ளார் ராணா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்