நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதால் பயிர்ச்செய்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதால் பயிர்ச்செய்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 9:23 am

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதால் இம்முறை சிறுபோகத்தின் போது பெரும்பாலான பிரதேசங்களில் பயிர்ச் செய்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 36 வீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்வழங்கல் – வடிகாலமைப்புச் சபையின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் வசந்த பண்டார பலுவஸ்வெவ தெரிவித்துள்ளார்.

பருவ மழை பெய்தபோதிலும் போதுமானளவு நீர் கிடைக்கப் பெறவில்லை என வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் சிறுபோக செய்கைகளுக்காக நீர் விநியோகிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்காக நீர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் பொலன்னறுவை மாவட்டத்தில் 75 வீதமும் அநுராதபுரத்தில் 30 வீதமும் சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்