தொண்டமானுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் – மஹிந்த அமரவீர

தொண்டமானுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் – மஹிந்த அமரவீர

தொண்டமானுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 1:06 pm

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனையில் நேற்று (01) நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர…

[quote]மலையகத்தின் தலைவர் தொண்டமான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம், எவர் வேண்டுமானாலும் இருக்கலாம், கட்சிகளை உருவாக்கலாம்.கூட்டணிகளை உருவாக்கலாம்.எனினும் ஜனாதிபதியின் ஆசியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆசியும் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிஸிற்கே உள்ளது. நாம் அவரை கைவிட மாட்டோம். நாம் அவரை தனிமைப்படுத்த மாட்டோம். நாம் அவரை முன்னோக்கி அழைத்துச் சென்று உயர்ந்த நிலையிலுள்ள கதிரையொன்றில் அமரவைப்போம் என்பதை பெருமையுடன் கூறுகின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்