சென்னையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு; நால்வர் காயம்

சென்னையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு; நால்வர் காயம்

சென்னையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு; நால்வர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 9:36 pm

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.

தியாகராஜா நகரிலிருந்து மண்ணடி நோக்கிப் பயணித்த போது சென்னை உயர்நீதிமன்றம் அருகில் காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த பாலத்தின் தடுப்பை உடைத்து வீதியில் தலைகீழாய்க் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த பெண் உட்பட ஐவரும் அருகில் இருந்த ராஜிவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் (30) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சென்னை பாரிமுனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்