சிறிகொத்தவிலுள்ள யானை சிலை மீது துப்பாக்கிச் சூடு: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

சிறிகொத்தவிலுள்ள யானை சிலை மீது துப்பாக்கிச் சூடு: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 7:56 am

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள யானை சிலை மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கியில் இருந்தே தோட்டா பாய்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றுகின்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரெ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறிகொத்தவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள யானைச் சிலை மீது நேற்று (01) மாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்