காங்கேசன்துறை கடற்பரப்பில் கைதான மியன்மார் பிரஜைகளை மிரிஹான தடுப்பு முகாமில் வைக்குமாறு உத்தரவு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைதான மியன்மார் பிரஜைகளை மிரிஹான தடுப்பு முகாமில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 7:22 pm

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 மியன்மார் பிரஜைகளையும் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி தர்மரட்ணம் கருணாகரன் முன்னிலையில் மியன்மார் பிரஜைகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 மியன்மார் பிரஜைகள், மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மியன்மார் பிரஜைகள் 14 பேரும் 16 சிறுவர்களும் அடங்கிய படகொன்று காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடலில் நேற்று முன்தினம் (30) கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 15 நாட்கள் நிரம்பிய மற்றும் நான்கு மாதங்கள் நிரம்பிய சிசுக்களும், இரண்டு இந்தியப் பிரஜைகளும்
இருந்துள்ளனர்.

வெளிநாடொன்றை நோக்கிப் படகில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்