உலகின் வயதான நபர் தனது 146 ஆவது வயதில் உயிரிழப்பு

உலகின் வயதான நபர் தனது 146 ஆவது வயதில் உயிரிழப்பு

உலகின் வயதான நபர் தனது 146 ஆவது வயதில் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 11:21 am

உலகில் அதிக வயது வரை வாழ்ந்த நபர் என்ற பெருமைக்குரியவர் தனது 146 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

1870 ஆம் ஆண்டில் பிறந்த Mbah Ghotho என்பவர் இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பிராந்தியத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தோனேசியா 1900 ஆம் ஆண்டிலேயே பிறப்புக்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது.

எனினும் அவரின் பிறப்பு தொடர்பான ஆவணங்கள் பெறுமதி வாய்ந்தவை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6 நாட்களின் பின்னர்
Ghoto வீடு திரும்பினார்.

இதன் பின்னர் அவர் மிகக்குறைவாகவே உணவு உட்கொண்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றாக உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ஒரு சில தினங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்