உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தடை

உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தடை

உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 10:13 am

விசாரணை உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களற்ற பட்டதாரிகளை சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அரச நிர்வாக குழுவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கணக்காய்வு, வங்கி நடைமுறை உள்ளிட்ட சில விடயதானங்களுக்காக சுமார் 100 பட்டதாரிகளுக்கான பற்றாக்குறை ஆணைக்குழுவில் நிலவுகின்றது.

கொள்வனவுகள், பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்தல் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்காக அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்