அதிவேக வீதியூடாக பயணிக்க போதுமானளவு பஸ்கள் இன்மையால் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிகள்

அதிவேக வீதியூடாக பயணிக்க போதுமானளவு பஸ்கள் இன்மையால் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிகள்

அதிவேக வீதியூடாக பயணிக்க போதுமானளவு பஸ்கள் இன்மையால் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிகள்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 1:52 pm

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக பயணிக்க காலி பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு இன்று முற்பகல் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இந்த வீதியை பயன்படுத்தும் பயணிகளுக்கு போதுமானளவு பஸ் சேவையிலீடுபடாமையே இதற்கான காரணமாகும்.

மஹரகம மற்றும் கடுவெல நோக்கி பயணிக்க பெருமளவான பயணிகள் காத்திருந்தனர்.

வாரத்தின் முதல் பகுதியில் தாம் இந்நிலைமையை தொடர்ந்து எதிர்நோக்கி வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

எதிர்பாராத அளவு பயணிகள் வருகை தந்தமையால் மேலதிகமாக பஸ்கள் சேவைக்குட்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் தமக்கு அறியக் கிடைக்கவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜீ ஹேமசந்திர தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்