12 கோடி ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

12 கோடி ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 7:57 pm

12 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் பயணிப்பதற்காக நேற்றிரவு வருகை தந்த குறித்த இந்தியப் பிரஜைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, அவர்களின் பயணப்பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயணப்பொதிகளில் அமெரிக்க டொலர், யூரோ, சவுதி ரியால், ஓமான் ரியால் உட்பட 14 நாடுகளின் 12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த இந்திய பிரஜைகள் இருவரும் அடிக்கடி நாட்டிற்கு வருகை தந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் ஊடாக சென்னைக்கு பயணிக்கும் நோக்கில் இவர்கள் இம்முறை நாட்டிற்கு வருகை தந்திருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்