ஏறாவூரில் மதில் சரிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

ஏறாவூரில் மதில் சரிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

ஏறாவூரில் மதில் சரிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 10:06 pm

மட்டக்களப்பு – ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில், வீட்டு மதில் சரிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

சசோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமி மீது இன்று பகல் மதில் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மதில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரே கட்டப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அனர்த்தத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்